Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் பாதிப்பு கிட்டதட்ட 20,000; அதீதமாகும் கொரோனா!

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (10:18 IST)
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒரே நாளில் 19,906 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,953லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881லிருந்து 3,09,713 ஆகவும்,  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685லிருந்து 16,095 ஆகவும் உயர்வு.  
 
அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,273 ஆக உயர்வு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments