வரவிருக்கும் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகள் சில மாநிலங்களில் காணப்படுகிறது என தகவல்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,27,68,880 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகள் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கொண்டு காணலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டாக்டர் கூறினார்.
கொரோனா மூன்றாம் அலை வருவதற்கு நமக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருப்பதாக நாம் நினைக்கக்கூடாது. இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது மூன்றாவது அலையின் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.