Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சய்லெண்டாய் வய்லெண்ட் ஆன கொரோனா: செப். மரணங்கள் உச்சம்!!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:15 IST)
கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகிலேயே அதிகளவு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என தகவல்.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 49,30,236 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 1,054 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 79,292 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,59,399 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,90,061 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போதைய தகவலின் படி கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகிலேயே அதிகளவு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரத்தைக் கடந்து வரும் சூழலில், கடந்த 19 நாட்களில் 20,000 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது… மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு எப்போது? காங்கிரஸ் அறிவிப்பு..!

குறைவாக பேசி, அதிகமாக செய்தார்: மன்மோகன் சிங்கிற்கு விஜய் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments