இந்தியாவில் ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்புகள்! சுகாதாரத்துறைக்கு அதிரடி உத்தரவு!

Prasanth Karthick
செவ்வாய், 27 மே 2025 (09:24 IST)

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

2020ல் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர்பலியை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பரவிய இந்த கோவிட் தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டு வருகிறது.

 

நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கேரளாவில் 430 பேருக்கு கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 96 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்திய அளவில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். என்றாலும், இது தீவிரமாக பரவக் கூடிய கோவிட் தொற்று இல்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படும்படி மாநில சுகாதார துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களை மாஸ்க் அணிய வலியுறுத்தும்படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments