Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று குறைந்தது தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (10:01 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,614 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,87,875ஆக உயர்ந்தது.
 
மேலும் புதிதாக 89 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,803 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5,185 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,31,513 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 40,559 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,79,91,57,486 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,18,511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆல் பாஸ் நடைமுறை தொடரும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை அதிபர் இந்திய வருகைக்கு பின் நடக்கும் சம்பவம்..!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம்! விமான நிலையம் செல்பவர்கள் அவதி..!

காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments