Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.49 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:54 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,69,60,172 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,92,311 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,40,85,110 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 26,82,751 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments