Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் I.N.D.I.A கூட்டணி இல்லை.. 7 தொகுதியிலும் போட்டி என காங்கிரஸ் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:06 IST)
பாஜகவை தோற்கடிக்க சமீபத்தில் I.N.D.I.A என்ற கூட்டணி உருவானது என்பதும் 26 கட்சிகள் கொன்ற இந்த கூட்டணியின் இரண்டு கட்ட  கூட்டம் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் இருக்கும் நிலையில் டெல்லியில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள காங்கிரஸ் மறுத்துவிட்டதாக தெரிகிறது 
 
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து I.N.D.I.A  கூட்டணியில் உள்ள  ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.  
 
இந்த கூட்டத்திற்கு பின் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்றும்  அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
 பாஜக வேட்பாளருக்கு எதிராகத்தான் எங்கள் கூட்டணி செயல்படும் என்றும் எங்கள் வேட்பாளரை கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு கட்சி ஜெயிப்பதற்கா நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்றும் ஆம் ஆத்மி கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments