Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!
, திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (15:06 IST)
சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்று முன் அறிவித்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 
 
நமது நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நாளை தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும் அரசின் கொள்கை முடிவுகள் தலையிடவும் செயல்படவும் தமிழ்நாடு ஆளுனர் முனைகிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது 
 
மேலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் இயற்றப்பட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு வேண்டுமென்று காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் என்றும் இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக நாளைய தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை