Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு ராகுல்தான் வேணும்: அடம்பிடிக்கும் காங்கிரஸார்

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (18:50 IST)
இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியே தலவர் பதவியில் நீடிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார் ராகுல் காந்தி. அவர் கடிதம் காங்கிரஸ் காரிய கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ராகுல் காந்தியே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் ராகுல் தன் முடிவில் விடாப்பிடியாக இருந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்பதில் காரிய கமிட்டிக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ராகுல் வெளியேறி இருக்கிறார். இதனால் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வரவிருந்த அமித்ஷா திட்டம் ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்து: 38 பேர் உயிரிழப்பு! 29 பேர் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம்..!

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments