Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளிக்கிறது: காங்கிரஸ் தலைவர் கரண் சிங்

Advertiesment
சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளிக்கிறது:  காங்கிரஸ் தலைவர் கரண் சிங்
, செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (12:04 IST)
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கரன்சிங் தெரிவித்துள்ளார்  
 
கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தின் கொள்கைகளை பின்பற்றி வரும் நிலையில்  அவரது பேச்சு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சனாதன தர்ம கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி என்ற முறையில் அவர் இவ்வாறு பேசியிருக்க கூடாது என்றும், அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்குது என்றும் ஆனால் உதயநிதி கருத்துக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி தலைக்கு வெகுமதியை உயர்த்த தயார்: அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா..!