Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

Advertiesment
Cricket

Senthil Velan

, திங்கள், 1 ஜூலை 2024 (14:28 IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியா, இந்தியா என முழக்கமிட்டு  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 
 
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,  தமிழக தலைவர்கள் என அனைவரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தின் இரு வகைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 
 
இந்திய அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
 
அவை சார்பில் அணியின் பயிற்சியாளர், உறுப்பினர்கள், அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறன் என அவர் குறிப்பிட்டார். மேலும், சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்க அணியையும் பாராட்டினார்.

 
மக்களவையிலும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்களை அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வாழ்த்தினார். தேசமே இந்தச் சாதனையை எண்ணி பெருமை கொள்வதாக கூறினார். அப்போது அவை உறுப்பினர்கள் இந்தியா, இந்தியா என முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!