Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்திஸ்கர் மாநிலத்தில் முதல் கொரோனா வைரஸ் அறிகுறி !!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (12:55 IST)
சத்திஸ்கர் மாநிலத்தில் முதல் கொரோனா வைரஸ் அறிகுறி !!

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகம் முழுவதிலும் 8,810 பேர் இறந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்திய அரசு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு நாட்டு விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பள்ளிகள், கேளிக்கை விடுதிகள், ஷாப்பிங் மால், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் மக்கள் பயணத்தை வெகுவாக குறைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இந்திய ரயில்களில் பலவற்றில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. பலர் டிக்கெட் முன்பதிவுகளை கேன்சல் செய்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், சட்டிஸ்கர் மாநிலத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் இருந்து ராய்பூருக்கு திரும்பிய 4வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments