Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னப்பிள்ளை காலில் விழுந்த வாஜ்பாய்: நெகிழ்ச்சி சம்பவம்!

Advertiesment
சின்னப்பிள்ளை காலில் விழுந்த வாஜ்பாய்: நெகிழ்ச்சி சம்பவம்!
, வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (20:58 IST)
காங்கிரஸ் கட்சியை சாராத 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் இன்று காலமானார். இவரை குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகிவருகிறது. 
தமிழ்கத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை, கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்.
 
இதற்காக இவருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் களஞ்சியம் சின்னப்பிள்ளை அன்றைய பிரதமர் வாஜ்பாய் கைகளால் பெற்றார். அப்போது வாஜ்பாய் சின்னப்பிள்ளையி காலில் விழுந்தார். 
 
இந்நிலையில், தற்போது சின்னப்பிள்ளை வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், தங்கராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியும் எனக்கு ஒரு விருது அளித்தார். அப்போது என்னை அன்போடு சம்பந்தி என்று கூறினார். அவரும் இறந்து விட்டார். வாஜ்பாயும் இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி-சோம்நாத் சாட்டர்ஜி -வாஜ்பாய்: ஒரே மாதத்தில் மறைந்த முப்பெரும் தலைவர்கள்