Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை விட சீனாவில் ஏகப்பட்ட வீரர்கள் உயிரிழப்பு! – உளவுத்துறை தகவல்!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (11:42 IST)
இந்தியா – சீனா படைகள் இடையே லடாக் பகுதியில் நடந்த மோதலில் சீனா தரப்பில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதேசமயம் சீனாவிலும் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமையை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய ராணுவ அதிகாரிகளும், மேல்மட்ட அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் இந்தியாவை விட அதிகமான வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவுடனான மோதலில் சீனாவில் 35 பேர் இறந்துள்ளதாகவும், சீன படைகளை வழிநடத்திய முக்கிய ராணுவ அதிகாரி ஒருவரும் அதில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் சீன வீரர்களின் இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடம் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!

அரசியல் பயணம் இனி கடுமையாக இருக்கும்: தவெக விஜய் அறிக்கை..!

இன்றிரவு 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. தீபாவளி பர்ச்சேஸ் செல்பவர்கள் ஜாக்கிரதை..!

விஜய் சொன்னது போல் அமைச்சரவையில் இடம் வேண்டும்: முதல்வருக்கு காங். நிர்வாகி கடிதம்..!

மருமகள் தற்கொலை; கைதுக்குப் பயந்து தற்கொலைக்கு முயன்ற மாமியார் பலி

அடுத்த கட்டுரையில்
Show comments