Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்குத்தண்டனைக்கு ஒப்புதல் அளித்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (15:17 IST)
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நாடு முழுவதும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் குரல் கொடுத்தனர்.
 
இதையடுத்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று அளித்தார். இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. 
 
இதே நாளில் நாடு முழுவதும் 10 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம், ஓடிசா, ஆந்திரா, அரியானா ஆகிய மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 
 
சட்டம் அமலுக்கு வந்த தினத்திலே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்