Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் தபால் வாக்குகள் தான் எண்ணப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி..!

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (15:55 IST)
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட இருக்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி செய்துள்ளார். 
 
இந்தியாவில் ஏழு கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை காலை முதல் எண்ணப்படும்  என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அனைத்து ஊடகங்களும் தேர்தல் முடிவுகள் குறித்த செய்தியை வெளியிட தயாராக இருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகளை அறிய மக்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பதிவானது. 
 
ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நாளைய வாக்கு எண்ணிக்கை என்பது தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்  என்றும் அதன் பிறகு தபால் வாக்குகள் எண்ணி முடிந்த பின்னர் 30 நிமிடங்களுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என்னப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments