Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சரான 3 டயர்களுடன் ஓடுகிறது இந்திய பொருளாதாரம்: ப.சிதம்பரம் காட்டம்!

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (12:10 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ஆளும் மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். 
 
மஹாராஷ்டிர காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம், இந்திய பொருளாதாரத்தை பெற்றி பின்வருமாறு பேசினார். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் முதலீடு, தனியார் நிறுவனங்கள் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசின் செலவினங்கள் ஆகியவை முக்கியமானது. 
 
இவை நான்கும் ஒரு காரின் 4 டயர்களை போன்றது. இதில் ஒரு டயர் அல்லது இரு டயர்கள் பஞ்சரானால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவிடும். இப்போது, பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சரான நிலையில் இருக்கிறது.
 
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என தெரியாமல், மத்திய அரசு திணறுகிறது. இப்போதுள்ள நிலையில் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
 
பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் கொடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், சராசரியாக ஒருநபருக்கு ரூ. 43 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து பக்கோடா கடைதான் தொடங்க முடியும் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments