இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைகழங்களில் இனி அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவு தேர்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மத்திய அரசின் 41 மத்திய பல்கலைகழகங்கள் மொத்தமாக செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைகழகங்களில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு பல்கலைகழக அளவிலான நுழைவு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது அனைத்து மத்திய பல்கலைகழகங்களுக்கும் ஒரே பொதுத்தேர்வை நடத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் தொடங்கும் இந்த பொது நுழைவு தேர்வு தொடர்பான அறிவிப்பு, ஆன்லைன் விண்ணப்பம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும், ஜூன் இறுதியில் நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.