Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஒரு ஆண்டுக்கு எந்த புதிய திட்டத்துக்கும் நிதி கிடையாது! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (10:45 IST)
கொரோனா காரணமாக இந்தியாவில் கடுமையான உள்நாட்டு பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 72 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. கொரோனா நிவாரணங்களுக்காகவும், தொழில் துறையை சீர் செய்யவும் மத்திய அரசு நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஓராண்டுக்கு அரசின் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டம் மற்றும் சுயசார்பு இந்தியாவுக்கான திட்டங்களுக்கு கீழுள்ள நலத்திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும். வேறு எந்த ஒரு புதிய திட்டங்களுக்கும் அறிமுகப்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments