Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி; ஈஸ்டர், ஹோலி கொண்டாட கட்டுப்பாடுகள்?! – மத்திய அரசு கடிதம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (13:57 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஈஸ்டர், ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பல மாநிலங்களில் இரண்டாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுவதால் கொரோனா முன்னெச்சறிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹோலி மற்றும் ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுக்கு மக்கள் கூட்டம் கூடும் என்பதால் கொரோனா அபாயம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் கொரோனாவை தடுக்க ஈஸ்டர் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments