Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை வேடம் போட வேண்டாம்: டுவிட்டருக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:46 IST)
கடந்த சில நாட்களாகவே குறிப்பாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஆரம்பித்த பின்னர் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒருபுறம் மத்திய அரசின் உத்தரவுக்கு மதிப்பளிப்பது போல் ஒரு சில கணக்குகளை முடக்கி மீண்டும் அவற்றை செயல்பட அனுமதிப்பது குறித்து கூறிய மத்திய அரசு ’டுவிட்டர் நிறுவனம் இரட்டை வேடம் போட்டு நாடகமாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது 
 
டுவிட்டர் நிறுவனத்தின் கணக்குகளை கையாளும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் நடைபெறும் போராட்டம் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது
 
இந்த நிலையில் 257 ட்விட்டர் கணக்குகளை கையாள்பவர்களை கண்டுபிடித்து அவற்றை முடக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து டுவிட்டர் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments