Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினாத்தாள் வெளியீடு-சிபிஎஸ்இ மறுப்பு

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (17:40 IST)
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இன்றைய தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானதாக எழுந்த புகாருக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெற்று வருகிறது. 
 
இன்று நடைபெறும் கணக்குப்பதிவியல் பாடத்தின் கேள்வித்தாள் நேற்று மாலை வாட்ஸ்அப்பில் வெளியானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கேள்வித்தாள் வெளியானது குறித்து சிபிஎஸ்இ கூறியதாவது:-
 
சிபிஎஸ்இ கணக்குப்பதிவியல் பாடத்தின் கேள்வித்தாள் வெளியாகவில்லை. கேள்வித்தாள் அடங்கிய பார்சல் சீல் வைக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கும் பத்திரமாக எடுத்து செல்லப்பட்டது. இதனால் கேள்வித்தாள் வெளியாக வாய்ப்பே இல்லை. சமூக வளைத்தளங்களில் சில விஷமிகள் இது போன்ற பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments