Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

Webdunia
திங்கள், 18 மே 2020 (13:54 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் கொரோனா பாதிப்புகள் இல்லாத மாவட்டங்கள், சில பகுதிகளில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ தேர்வுகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் .  தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். தேர்வர்கள்  முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும், தேர்வறைக்கு வரும் போது  சானிடைசர்கள் கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த கொரோனா காலத்தில் தேர்வு தேவையா என பலரும் விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments