Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்திக் சிதம்பரம் - இந்திராணி முகர்ஜி நேருக்கு நேர் விசாரணை; சிபிஐயின் பலே பிளான்

Advertiesment
கார்த்திக் சிதம்பரம் - இந்திராணி முகர்ஜி நேருக்கு நேர் விசாரணை; சிபிஐயின் பலே பிளான்
, வெள்ளி, 2 மார்ச் 2018 (13:09 IST)
கார்த்திக் சிதம்பரம் மற்றும் இந்திராணி முகர்ஜியை ஒரே அறையில் வைத்து நேருக்கு நேர் விசாரணை நடத்த சிபிஐ ஏற்பாடு செய்துள்ளது.

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து சென்னையில் பிப்ரவரி 28ஆம் தேதி சிபிஐ கார்த்திக் சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது.
 
கைது செய்த கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கார்த்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க சிபிஐக்கு நேற்று உத்தரவிட்டது. ஒருநாள் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் கார்த்திக் சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 
 
கார்த்திக் சிதம்பரத்திடம் ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் இதனால் விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கார்த்திக் சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் ஆகியோர் அளித்த வாக்குமூலமே கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய முக்கிய காரணமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரம், இந்திராணி முகர்சி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோரை ஒரே அரையில் வைத்து நேருக்கு நேர் விசாரணை நடத்த சிபிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பல புதிய உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்ப்பால் ஊட்டும் மாடலிங் பெண்ணின் படத்தை பிரசுரித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிகை