Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையை கடக்கும் மாணவர்களின் நிலை இதுதான் ... ராகுல் பகிர்ந்த வீடியோ!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (14:06 IST)
ராகுல் காந்தி சில மாணவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் அவசரமாக வெளியேற்றும் திட்டத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அதோடு சில மாணவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 
இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது என் இதயம் துடிக்கிறது. எந்தப் பெற்றோரும் இதைப் பார்க்கக்கூடாது, என்று அவர் ட்விட்டரில் சில மாணவர்களின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments