Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்.! பிரதமர் மோடி பெருமிதம்..!!

Senthil Velan
செவ்வாய், 23 ஜூலை 2024 (15:22 IST)
மத்திய பட்ஜெட் இளைஞர்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமானது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட் மக்களிடையே வரவேற்போம், விமர்சனங்களும் பெற்றுள்ளன.
 
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி,  மத்திய பட்ஜெட் மகளிர் பழங்குடியினர் சிறுவணிகர் மேம்பாட்டிற்கு உதவும் என்றும் இளைஞர்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமானது என்றும் தெரிவித்தார். அனைத்து சமூகத்தையும் வலுப்படுத்துவதுடன் அவர்களின் வளர்ச்சிக்கும், அதிகாரம் பெறுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
 
உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து படிநிலைகளையும் வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து அகற்றப்பட்டு உள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறினார். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தால் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ: நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்.! ராகுல் காந்தி விமர்சனம்.!!

மேலும் மத்திய பட்ஜெட் இந்தியாவை உலகின் உற்பத்தி கேந்திரமாக மாற்றும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெங்கு காய்ச்சலால் நர்சிங் படித்த பெண் உயிரிழப்பு.. வாலாஜாபேட்டை அருகே சோகம்..!

ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி.. 100 கிமீ உயரம் சென்றபோது வெடிக்க வைத்த விஞ்ஞானிகள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments