Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல்வராகும் சந்திரசேகர ராவ்? பாஜக ஆதரவு கரம்!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (13:44 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் யார் வெற்றி பெருவார் என்ற கருத்து கணிப்பும் வெளியானது. 
 
அந்த கருத்து கணிப்பின்படி பாஜக - மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளிலும், காங்கிரஸ் ராஜஸ்தானிலுன், சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சி தெலங்கானாவில் ஆடி அமைக்கும் என கூறப்பட்டது. 
 
அதிலும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 11 ஆம் தேதி வெளியாகும். 
 
ஆனால், பாஜக சந்திரசேகர ராவின் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவை எங்களுக்கு. அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம். எனவே, எங்களது ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு என அறிவித்துவிட்டார். 
 
எனவே, சந்திரசேகர் ராவ் மீண்டும் தெலங்கானா மாநில முதல்வராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments