Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 இல் ஆட்சி அமைப்போம்: பாஜகவில் சேர்ந்த விஜயசாந்தி சூளுரை!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (07:39 IST)
தமிழ் தெலுங்கு நடிகையான விஜயசாந்தி நேற்று பாஜகவில் இணைந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் டெல்லியில் இருந்து மீண்டும் தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியுள்ள விஜயசாந்தி தெலுங்கானாவில் 2023 இல் பாஜக ஆட்சி நடைபெறும் என்றும், 2023ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த விஜயசாந்தி அதன் பின்னர் முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என்று கூறியதால் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். தற்போது அவர் காங்கிரஸில் இருந்து மீண்டும் பாஜகவிற்கு தாவியுள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட விஜயசாந்தி, அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘முதல்வர் சந்திரசேகர ராவின் ஆட்சியில் தெலுங்கானா மாநிலத்தில் எந்த விதமான வளர்ச்சியும் இல்லை என்றும், வரும் 2023 நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்
 
பாஜகவுக்கு விஜயசாந்தியின் வரவு தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவிற்கு ஆதாயத்தை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அண்ணாமலை தன்னைத் தானே காறி துப்பிக் கொள்ள தயாரா? - திமுக அமைச்சர் கேள்வி!

ராகுல் காந்தி காங்கிரசுக்காக பாடுபடுகிறார், நான் நாட்டுக்காக பாடுபடுகிறேன். கெஜ்ரிவால் பதிலடி:

தேர்தல் விதிகளை மீறினாராம்: டெல்லி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ததால் பரபரப்பு

திருப்பூர் அருகே தனியார் மதுபான கூடம்.. பொங்கல் தினத்தில் போராட்டம் செய்த பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments