Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சியை மட்டுமல்ல, கூட்டணி கட்சியையும் போட்டு தள்ளிய பாஜக!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (07:55 IST)
பீகார் மாநிலத்தில் பாஜகவின் அபாரமான வியூகத்தால் எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி சொந்த கூட்டணி கட்சியையும் போட்டு தள்ளி உள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவருகிறது
 
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா 110 தொகுதிகளில் போட்டியிட்டது என்பதும் ஐக்கிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஐக்கிய ஜனதா தளமும் வெறும் 45 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கை பயன்படுத்தி பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டு, தனது சொந்த கூட்டணி கட்சியின் வெற்றியை தடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இதே பாணியைத்தான் தமிழகத்திலும் கடை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்று, அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற  பாஜக திட்டமிடும் என்று கூறப்படுவதால் அதிமுக உஷாராக இருக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments