Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் தோல்வியை தழுவிய பாஜக

Advertiesment
மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் தோல்வியை தழுவிய பாஜக
, செவ்வாய், 19 டிசம்பர் 2017 (14:41 IST)
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது என்பதை அகமதாபாத் மிர்ரர் ஊடகம் தெரிவித்துள்ளது.

 
குஜராத் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி முழு வீச்சில் பிரசாரம் செய்தார். 30 பிரசார கூட்டங்களை மோடி நடத்தினார். ஆனால் அவரது பிரசார கூட்டத்தில் மக்கள் அதிக அளவு பங்கேற்கவில்லை என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முடிவு வெளியானது. 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றிப்பெற்றது.
 
பாஜக வெற்றிப்பெற்றாலும் மோடி அலை பலனளிக்கவில்லை. மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இதுகுறித்து அகமதாபாத் மிர்ரர் ஊடகத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்ட வாவ் மற்றும் சோம்நாத் தொகுதிகளில் அமைச்சர்களாக இருந்த சங்கர் சவித்ரி, ஜாஷா பரத் தோல்வி அடைந்தனர். அதேபோல் தாரியில் பாஜக மூத்த தலைவர் திலீப் சங்கானி தோல்வி அடைந்தார். 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மகேந்திர மஸ்ரு மற்றும் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அம்ருதியா தோல்வி அடைந்தார்.
 
இந்த விவரங்கள் தெரிவாக செய்தியில் வெளியாகியுள்ளது. மேலும் மோடி பிரசார செய்த இடங்களில் பாஜக தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மோடி அலை பிரகாசமாக வீசிகிறது என பாஜகவினர் கூறிவருவது பொய் என நிரூபனமாகியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டார்கெட் டேட்டா யூசர்ஸ்: ஏர்டெல் புதிய யுக்தி!!