Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ஆண்டில் ரூ.742 கோடி கட்சி நிதி: முதலிடத்தில் பாஜக!

ஒரே ஆண்டில் ரூ.742 கோடி கட்சி நிதி: முதலிடத்தில் பாஜக!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (11:42 IST)
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள கட்சி நிதி பட்டியலில் ரூ.742 கோடி நிதி ஈட்டி முதலிடத்தை பெற்றுள்ளது பாஜக.

ஆண்டுதோறும் அரசியல் கட்சிகள் பெறும் நிதிகள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம். 2018 – 2019ம் ஆண்டில் இந்திய அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்த தகவல்களை திரட்டி வெளியிட்டுள்ளனர்.

2018-19ல் பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்றுள்ள நிதி தொகை மொத்தமாக ரூ.1,951 கோடி ஆகும். 2017 – 2018ம் ஆண்டில் ரூ.437 கோடி ரூபாய் நிதி பெற்றிருந்த பாஜக 2018 – 2019ம் ஆண்டில் ரூ.742 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இந்த தொகை மொத்த கட்சிகளின் தொகையில் 78 சதவீதமாகும்.

அதேபோல கடந்த 2017-18 ல்  வெறும் ரூ.26.25 கோடொயே பெற்றிருந்த காங்கிரஸ் 2018-19ல் ரூ0.148.50 கோடி நிதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கட்சிகளுக்கு நிதியளித்துள்ளவர்களில் 92 சதவீதம் தனியார் பெருநிறுவனங்கள் ஆகும். ரூ.876 கோடி ரூபாய் பெறுநிறுவனங்களில் இருந்து பல்வேறு கட்சிகளுக்கு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டு நிதிநிலையுடன் ஒப்பிடும்போது 2018-19ன் நிதி 109 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவுக்கு நேரடி நெருக்கடி: பொறுமை இழந்து பொங்கிய பிரேமலதா!!