Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமாதானத்திற்கு கிளம்பிய ராஜ்நாத் சிங்... இனி அவைகள் முடங்காதா?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:07 IST)
நாடாளுமன்றம் இன்றுடன் 11 நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் இன்றும் வழக்கம்போல அமளியால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாஜக அரசு அவையை நடத்துவதற்கான சமாதான முயற்சிகளை துவகியுள்ளது. அதன்படி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்.
 
அப்போது முதலில் கோவிட் தொற்று குறித்தும், பின்னர் பெகாசஸ் குறித்தும் விவதாம் நடத்தலாம் என கூறியதாக தெரிகிறது. எனவே நாளை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல செயல்பட வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments