Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி: உறுதி செய்த அமித்ஷா

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (08:42 IST)
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன. கடந்த சில மாதங்களாக பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அங்கு சட்டசபை தேர்தலை நிதிஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளதாக உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
முத்தலாக், காஷ்மீர் உள்பட ஒரு சில விவகாரங்களில் பாஜகவிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிதிஷ்குமாரின் கட்சி, பாஜக உடன் கூட்டணி அமைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாளிக்க பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியானது என நிதிஷ்குமார் மற்றும் பாஜக தரப்பில் முடிவு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து சமீபத்தில் பேட்டியளித்த அமித்ஷா அவர்கள் ’கூட்டணியில் எப்போதும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும், ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் நிதிஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்போம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பீகார் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments