விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜயகாந்த் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி !

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (08:20 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபடாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது விக்கிரவாண்டி வேட்பாளருக்கு ஆதரவாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவாரா என்பது சந்தேகமே. ஆனாலும் விஜயகாந்த் முகத்தைப் பார்ப்பதில் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments