Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிபிஐ- க்கு ஆந்திராவில் தடை – பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு செக்?

சிபிஐ- க்கு ஆந்திராவில் தடை – பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு செக்?
, சனி, 17 நவம்பர் 2018 (08:26 IST)
ஆந்திராவில் தொடர்ந்து ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வந்த சிபிஐ-க்கு ஆந்திர மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து  வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்ற  மறுப்பதாகக் கூறி கூட்டணியை விட்டு வெளியே வந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜக வுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்ற தலைவர்களை சந்திக்கும் வேலைகளிலும் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

கூட்டணியை விட்டு வெளியேறியதில் இருந்தே பாஜக அரசு சந்திரபாபு நாயுடுவுக்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வருவதாகக் கூறப்பட்டது. அக்கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் வீடுகளில் சி.பிஐ.யை ஏவி சோதனைகள் செய்து வந்தது. ஆனாலும் பெரிய அளவில் ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிபிஐ சோதனைகளால் அதிருப்தியடைந்த சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியினர். சிபிஐ பாஜகவின் கைப்பொம்மை போல செயல்படுகிறது என குற்றம் சாட்டினர். எனவே தற்போது சந்திரபாபு நாயுடு ஒரு அதிரடியான முடிவை அறிவித்துள்ளார். இந்தியாவில் டெல்லியைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் சிபிஐ சோதனை செய்ய அந்தந்த மாநிலங்களின் பொது ஒப்புதல் தேவை. அந்த பொது ஒப்புதலை நீக்கி புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனால் ஆந்திராவில் இனி சிபிஐயால் சோதனைகளில் ஈடுபட முடியாது. மாநில லஞ்ச ஒழிப்புத் துறை இனி அதுபோன்ற முறைகேடுகளில் விசாரணையில் ஈடுபடும் என அறிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த அதிரடி முடிவுக்கு மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆதரித்துள்ளதோடு தங்கள் மாநிலத்திலும் இந்த முடிவு குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவிற்கு சவால்விட்ட ரஜினிகாந்த!! எதற்காக தெரியுமா?