Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய அய்யாக்கண்ணு திடீர் பல்டி

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (05:46 IST)
பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் சமீபத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவித்திருந்தார். இதனால் நூறுக்கும் மேற்பட்டோர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அங்கு வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்.
 
அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 'பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்தால் வாரணாசியில் போட்டியில்லை. மேலும் விவசாயிகளைக்கு தேவையான வாக்குறுதியை பாஜக அளித்துள்ளதால் 111 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம்' என்று கூறியுள்ளார். அய்யாக்கண்ணுவின் இந்த திடீர் பல்டி மற்ற விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments