Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள்: அகற்றப்படும் கூடாரங்கள்!

Advertiesment
year long agitation ends
, வியாழன், 9 டிசம்பர் 2021 (15:30 IST)
ஓராண்டுக்கு மேலாக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தை தற்போதைக்கு முடித்துக்கொள்ள விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். ஆம், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் முடிவுக்கு வருகிறது. சிங்கு எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
டெல்லி - சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகள் கூடாரங்களை அகற்றி வருகின்றனர். மத்திய அரசு வழங்கிய திருத்தி அமைக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உறுதியை விவசாயிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் கூடாரங்கள் அகற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ வீரர்கள் இறப்பு; ஊட்டியில் நாளை முழு கடையடைப்பு!