Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட் சென்ற அர்னாப்!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:57 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அவர்கள் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் தங்களிடம் இது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு சார்பில் வழக்கறிஞர் சச்சின் பாட்டில் என்பவர் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளார். தங்களுடைய கருத்தை கேட்காமல் இந்த ஜாமீன் மனுவில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments