கட்டிட இண்டீரியர் வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக பிரபல ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமியை இன்று கைது செய்த போலீஸார் அவரை தரத்தரவென இழுத்துச் சென்ற வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில் ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸ் அனுமதி கோரியுள்ளது. மேலும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய சென்றபோது பெண் காவலரைத் தாக்கியதாக மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட அன்வி நாயக்கின் மகள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அதில், அர்னாப் ரவுடிகளை வீட்டிற்கு அனுப்பி மிரட்டினதாகவும்,தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும் அவரின் கைதுக்காகக் காத்திருந்ததாகவும்,எனது தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டுமன தெரிவித்துள்ளார்.
மேலும், அர்னாபுக்கு எந்த இந்தியனும் உதவக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்