ஆந்திராவில் சுங்கச்சாவடி ஊழியரை லாரி டிரைவர் ஒருவர் லாரியில் தொங்கவிட்டபடி 10 கிமீ தூரம் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கத்தாடு அருகே சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே வந்த ஹரியானாவை சேர்ந்த லாரி ஒன்று சுங்க கட்டணம் செலுத்தாமல் சாவடியை தாண்டு செல்ல முயன்றுள்ளது.
அப்போது சுங்கசாவடி ஊழியர் சீனிவாசலு என்பவர் லாரி டிரைவரை பிடிப்பதற்காக லாரி பம்பர் மீது ஏறியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத லாரி டிரைவர், சீனுவாசலுவை லாரியின் முகப்பில் வைத்துக் கொண்டே லாரியை கிளப்பி சென்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்ததுடன், லாரியையும் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 10 கி.மீ தூரம் நடந்த சேஸிங்கில் ஒருவழியாக லாரியை வழிமறித்த போலீஸார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.