Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த பிச்சைக்கார‌ர் பையில் ரூ.1.83 லட்சம்: சக பிச்சைக்காரர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (22:34 IST)
ஆந்திராவில் உயிரிழந்த பிச்சைக்கார‌ர் பையில் இருந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள மார்க்கண்டேஸ்வ‌ர‌ர் கோவில் அருகே ஒரு பிச்சைக்காரர் கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். காஞ்சி நாகேஸ்வர‌ர் என்ற பெயரை கொண்ட இந்த சாது நேற்று உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை இறுதிச்சடங்கு செய்ய தேவையான பணத்தை எடுக்க அவரது பையை சோதனையிட்டபோது, அதில் 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த சக பிச்சைக்கார்கள் உடனடியாக இந்த தகவலை காவல்நிலையத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பணத்தை மீட்ட போலீசார், காஞ்சி நாகேஸ்வர‌ரின் இறுதி அஞ்சலிக்கு 3 ஆயிரம் ரூபாயை செலவு செய்து விட்டு மீதியை என்ன செய்வது என்று ஆலோசனை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மீதமுள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சாதுக்கள் நல திட்டத்திற்கு வழங்கிட வேண்டும் என சக சாதுக்கள் கேட்டுகொண்டுள்ளதால் அவ்வாறே செய்யலாம் என காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?

சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த மாற்று ஏற்பாடு..!

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments