Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்..! சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு திரட்டுகிறார்..!

Senthil Velan
செவ்வாய், 7 மே 2024 (17:33 IST)
சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று 11-ஆம் தேதி ஆந்திராவில் பாமக தலைவர் அன்புமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்ற நிலையில் நான்காம் கட்டத் தேர்தல்  வருகிற 13-ஆம் தேதி நடக்கிறது. 
 
இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக, ஆந்திர  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 11-ஆம் தேதியோடு நான்காம் கட்டத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது.
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். குப்பம் தொகுதி என்பது தமிழக எல்லையோரம் இருக்கும் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் சுமார்  ஒன்றரை   லட்சம் வன்னியர் சமூகத்தினர் இருந்து வருகிறார்கள். அதனால், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பாமக தலைவர் அன்புமணியை பிரச்சாரத்திற்காக சந்திரபாபு நாயுடு அழைத்துள்ளார்.

ALSO READ: ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.! சோனியா காந்தி வலியுறுத்தல்..!!
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இருப்பதால், சந்திரபாபுவின் அழைப்பை ஏற்று பிரச்சாரத்துக்கு வருவதாக ஒப்பு கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ்,  வருகிற 11-ஆம் தேதி ஆந்திராவில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments