Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பீட் ப்ரேக்கரில் மோதி திரும்ப வந்த உயிர்..! மகாராஷ்டிராவில் ஆச்சர்ய சம்பவம்!

Prasanth Karthick
வெள்ளி, 3 ஜனவரி 2025 (12:12 IST)

மகாராஷ்டிராவில் இறந்து போனதாக கருதப்பட்ட நபர் ஒருவர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது உயிர் வந்து எழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மருத்துவத்துறையில் பெரும் வளர்ச்சி கண்டிருந்தாலும், இன்னும் பல விஷயங்கள் புதிராகவே இருந்து வருகின்றன. அவற்றில் ஒன்று இறந்தவர்கள் திடீரென உயிர் பிழைத்து எழும் சம்பவங்கள். இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பிணம் கடைசி நேரத்தில் எழுந்து அமர்ந்த செய்திகளும் அவ்வபோது வெளியாகி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

 

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயதான பாண்டுரங்கன். இவருக்கு சமீபத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை இறுதி காரியங்களுக்காக வீட்டிற்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

வீட்டிலும் சொந்தக்காரர்களுக்கு சொல்லி இறுதி காரியங்களை தொடங்கியுள்ளனர். வீட்டை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வழியில் இருந்த ஒரு ஸ்பீட் ப்ரேக்கரில் வேகமாக ஏறி இறங்கியுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் பலமாக குலுங்கிய நிலையில் இறந்து கிடந்த பாண்டுரங்கன் திடீரென கண் விழித்து எழுந்து அமர்ந்துள்ளார்.

 

இதை கண்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்த உறவினர்கள் மீண்டும் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பாண்டுரங்கன் இறந்து விட்டதாக சொன்ன மருத்துவமனை இந்த சம்பவம் தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்பீட் ப்ரேக்கரில் மோதி திரும்ப வந்த உயிர்..! மகாராஷ்டிராவில் ஆச்சர்ய சம்பவம்!

காலை முதல் அமலாக்கத்துறை சோதனை: முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

கணவன் கழுத்தில் கயிறு கட்டி தெருவில் இழுத்து சென்ற மனைவி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யுடன் பாஜக கூட்டணியா? விஜய் போல எல்லாரும் இருக்கணும்! - பாஜக குஷ்பு பரபரப்பு பதில்!

இன்னொரு பேரிடரா? சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments