Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயக படுகொலை செய்தது நாங்களல்ல காங்கிரஸ்தான் - அமித் ஷா

Advertiesment
ஜனநாயக படுகொலை செய்தது நாங்களல்ல காங்கிரஸ்தான் - அமித் ஷா
, வியாழன், 17 மே 2018 (15:53 IST)
அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் மஜக கட்சிக்கு அழைப்பு விடுத்ததுதான் ஜனநாயக படுகொலை என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

 
நேற்று இரவு ஆளுநர் கர்நாடகா முதல்வராக பதிவியேற்க எடியூராப்பா அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா இன்று காலை முதல்வராக பதவியேற்றார். சட்டசபையை கூட்டி பெரும்பானமை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆட்சியமைக்க தேவையான இடங்களை காங்கிரஸ் - மஜக கூட்டணிக்கு இருந்தபோதிலும் ஆளுநர் பாஜகவிற்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவில் ஜனநாயகம் புதைக்கப்பட்டுவிட்டது என்று கூறி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதித்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ஜனநாயக படுகொலை நடைபெற்றது காங்கிரஸ் மஜக கட்சிக்கு அழைப்பு விடுத்த நிமிடம்தான். காங்கிரஸ் கர்நாடகா மாநில நலனுக்காக செய்யவில்லை, தங்களது அரசியல் நலனுக்காக செய்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
 
பாஜக ஜனநாயக படுகொலை செய்துவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அமித் ஷா நாங்கள் இல்லை காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலை செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரதட்சணை கொடுமை - 6 வயது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்