Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மோடி பிரதமராக 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு.. அமெரிக்க நிறுவனத்தின் கணிப்பில் தகவல்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (11:19 IST)
மீண்டும் மோடி பிரதமராக எண்பது சதவீத இந்தியர்கள் ஆதரவு அளித்துள்ளதாக அமெரிக்க நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளன.  
 
இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல தனியார் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
 
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 'பியு ரிசர்ச் சென்டர்' என்ற அமைப்பு இந்தியாவில் நடத்திய கருத்துக்கணிப்பில்  மீண்டும் மோடி பிரதமராக 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் எடுத்த கருத்துக்கணிப்பில் 24 நாடுகளில் மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்  
 
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமானவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மோடியின் உலகளாவிய பார்வைம் இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்கான முயற்சி ஆகியவை தான் அவருக்கு அதிகமான ஆதரவு வருவதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments