Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க ஆட்சிக்கு வந்தா 10 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு! – அகிலேஷ் யாதவ் வாக்குறுதி

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (09:10 IST)
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக ஆளும் பாஜகவிற்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் குற்றவாளிகளை வேட்பாளர்களாக்கியுள்ளதாக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். இந்நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய அகிலேஷ் யாதவ் “பாஜகவில்தான் இதுவரை 83 குற்றவாளிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

மேலும், சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ரூ.10 க்கு தரமான உணவு வழங்கப்படும் என்றும், சமாஜ்வாதி கிரானா என்ற திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் தரமான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகள் நிறுவப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments