பெகாசஸ் உளவு மென்பொருளை பிரதமர் மோடி வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகாசஸ் மூலமாக மத்திய அரசு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஒட்டுக் கேட்டதாக வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 500க்கும் மேற்பட்ட புகார்கள் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட நிலையில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் விவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இன்று இதுதொடர்பாக காங்கிரஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.