Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அஜித்திற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு, கட்சியில் பிளவு”.. மஹாராஷ்டிராவில் தொடரும் பல திருப்பங்கள்

Arun Prasath
சனி, 23 நவம்பர் 2019 (11:14 IST)
மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார்.  இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்பவார், “பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல, இது அஜித் பவாரின் சொந்த முடிவு” என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் அளித்ததால் தான் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளதாக பாஜவை சேர்ந்த கிரிஷ் மகராஜன் கூறியுள்ளார்.

இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித்பவாருக்கு ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக சிலரும் இருப்பதால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments