Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டார் – சந்திரபாபு நாயுடுவை பஸ்ஸில் போக சொன்ன அதிகாரிகள்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (14:57 IST)
முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் ’சிறப்பு சலுகைகள் தர முடியாது மக்களோடு மக்களாக பஸ்சில் செல்லுங்கள்’ என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று விஜயவாடா விமான நிலையத்திற்கு சென்றார் சந்திரபாபு நாயுடு. அவருக்கு நக்ஸலைட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் பாதுகாப்பு சோதனைக்கு நிற்க தேவையில்லை. விஐபிகளுக்கான சிறப்பு வாசல் வழியாகவே செல்லலாம்.

ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. முறையாக சோதனை செய்துதான் அனுப்புவோம் என சோதனை சாவடி பக்கமாக அவரை கொண்டு வந்து சோதனை செய்து அனுப்பினர். சோதனை சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சோதனை முடிந்துதான் உள்ளே அனுமதிகப்பட்டார். விமானத்துக்கு செல்ல அவர் விஐபிக்கள் பஸ்சில் செல்ல அனுமதி கேட்டார். அதற்கும் மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் சாதரண மக்கள் போகிற பஸ்ஸில் தான் நீங்களும் போக வேண்டும் என சொல்லிவிட்டார்கள்.

மறுபேச்சு பேசாமல் சந்திரபாபு நாயுடு மக்கள் பயணித்த பஸ்ஸிலேயே ஏறி விமானத்திற்கு சென்றார்.

இசட் பிரிவு பாதுகாப்பு பெற்ற ஒரு கட்சி தலைவருக்கு எந்த வித சலுகைகளும் அளிக்காததை தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் முதல்வராக நாடு முழுவதும் சுற்றி வந்த மனிதன் இப்போது சொந்த மண்ணிலேயே அவமானப்படுத்தப்பட்டிருப்பது அவரது தொண்டர்களுக்கு மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments