கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் சந்தித்து பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உலக நாட்டுத்
தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்ளுடன் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்றனர்.
இந்நிலையில் மோடியும், இம்ரான்கானும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்து, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பு உலக அரசியல் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.